உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளபட்டி கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சின்னாளபட்டி கோயில் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்

சின்னாளபட்டி: சின்னாளபட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி காளியம்மன், முனியப்பன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், பிருந்தாவன தோப்பில் இருந்து அம்மன் கரகம் பாலித்தல் நடந்தது. முக்கிய வீதிகளில், ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்தல் அக்னி சட்டி எடுத்தல் பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !