முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி ஊர்வலம்
ADDED :1141 days ago
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. கோயிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரசூரணி நீரில் புனித நீராடி மீண்டும் கோயிலை வந்தடைந்தார். முன்னதாக, மூலவர் அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.