கத்திரிக்காய் சித்தர், கருப்பண்ண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்
ADDED :828 days ago
அலங்காநல்லூர்; அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டி கத்திரிக்காய் சித்தர், கருப்பண்ண சுவாமி கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. ஆக.,20ல் அழகர்கோயில் ராக்காயி அம்மன் தீர்த்த தொட்டியில் தீர்த்தம் எடுத்து வந்து காப்புகட்டினர். நேற்று சிறப்பு யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது. சித்தர் மற்றும் சுவாமிக்கு புனிதநீரால் அபிஷேக ஆராதனை செய்தனர். சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம பிள்ளைமார் உறவின்முறை, பெண்ணடி மக்கள் செய்திருந்தனர்.