குபேர லட்சுமிக்கு சிறப்பு வழிபாடு
ADDED :828 days ago
கீழக்கரை: கீழக்கரை தட்டான்தோப்பு தெரு, பத்திரகாளி அம்மன், நாராயணசாமி கோயிலில் தனி சன்னதியில் மூலவர்கள் மகாலட்சுமி, குபேரர் சமேத சித்திரலேகா உள்ளனர். இன்று ஆவணி வியாழக்கிழமை முன்னிட்டு குபேரர், லட்சுமி உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாரதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு பச்சை கயிறு, பச்சை குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பெண்கள் நெய் தீபமேற்றி வழிபாடு செய்தனர்.