கிருஷ்ண ஜெயந்தி விழா காப்பு கட்டுதலுடன் துவக்கம்
ADDED :828 days ago
உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை அருகே களக்குடி கோகுலபுரத்தில் பாமா, ருக்மணி சமேத கோகுல கிருஷ்ணர் கோயில் உள்ளது. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நேற்று காலை 9:00 மணியளவில் கோயிலில் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது.
மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வருகிற செப்.,6 கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு 12 மணி அளவில் கண்ணபிரான் பிறப்பு நிகழ்ச்சி மறுநாள் கோயில் வளாகத்தில் மஞ்சள் நீராட்டு விழா, உறியடித்தல், உற்ஸவ மூர்த்தி ஊர்வலம் உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை களக்குடி கோகுலபுரம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.