உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பாக மந்த்ராலயம் ராகவேந்திரருக்கு வஸ்திர பகுமானம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சார்பாக மந்த்ராலயம் ராகவேந்திரருக்கு வஸ்திர பகுமானம்

ஆந்திரா; ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் சார்பாக ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்திற்கு வஸ்திர பகுமானம் வழங்கப்பட்டது.

மந்த்ராலயம் ராகவேந்திரர் கோயிலில் ஆராதனை விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆராதனை தொடக்க நாளான நேற்று, ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் சார்பாக வஸ்திர பகுமானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் சே.மாரியப்பன், செயல் அலுவலர் மா.வேல்முருகன், அர்ச்சகர் சுந்தர் பட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். வஸ்திர பகுமானம் மந்த்ராலயம் மடாதிபதி மற்றும் கைங்கரிய பரார்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. மந்த்ராலய மடாதிபதி அனைவருக்கும் ஆசி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !