உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ தெப்பல் உற்சவம்

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவ தெப்பல் உற்சவம்

புதுச்சேரி : மணக்குள விநாயகர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி, நேற்று வேதபுரீஸ்வரர் கோவிலில் தெப்பல் உற்சவம் நடந்தது.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் 63ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்து வருகிறது. கடந்த 30ம் தேதி மணக்குள விநாயகர் தேரோட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 31ம் தேதி காலை சுவாமிக்கு கடல் தீர்த்தவாரியும், இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதியுலா நடந்தது. நேற்றிரவு வேதபுரீஸ்வரர் கோவில்குளத்தில், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் 7ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 13ம் தேதி மதியம் 108 சங்காபிஷேகத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !