சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு
ADDED :825 days ago
பாகூர்: புதுச்சேரி – கடலுார் சாலை கிருமாம்பாக்கத்தில் உள்ள ஓம் ஸ்ரீ ராஜ சாய்பாபா கோவிலில், 15ம் ஆண்டு ஆராதனை விழா நடந்தது. அதனையொட்டி நேற்று காலை கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், குருகாயத்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்கள் தங்களது கைகளால் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாய்பாபா பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.