உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. நெல்லிக்குப்பம் செல்லியம்மன் கோவிலில் பிராம்மி, மகேஷ்வரி, இந்திராணி, வைஷ்ணவி, வராஹி, கவுமாரி, சாமுண்டி என சப்த கன்னிகள் அருள்பாலித்து வருகின்றனர். மேலும் வராஹி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. இக்கோவிலில் சாகை வார்த்தல் விழாவை முன்னிட்டு சப்த கன்னிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூங்கரகம் ஊர்வலம் வந்த பிறகு சாகை வார்த்தல் நிகழ்வு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ராமு பூசாரி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !