கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் நடும் விழா
ADDED :825 days ago
கொடைரோடு: அம்மையநாயக்கனூர் கதலி நரசிங்க பெருமாள் கோயிலில் கொடிமரம் நடும் விழா நாளை நடைபெறுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் ஆறு மாதத்திற்கு முன்பு பாலாலயத்துடன் துவங்கியது. சிவன் விஷ்ணு ஒரே சன்னதியில் அமைந்த சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நாளை (செப். 3) காலை 10 மணி அளவில் புதிய கொடிமரம் நடும் விழா நடைபெற உள்ளது. இந்து சமய அறநிலையத்துறையினர், உபயதாரர்கள் திருப்பணி குழுவினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.