மகா சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1135 days ago
மேட்டுப்பாளையம்: மகா சங்கடஹர சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள மேதர் பிள்ளையார் கோவிலில், சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேட்டுப்பாளையம் பகுதியில் அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.