குருவாயூர் கிருஷ்ணருக்கு 38 சவரன் தங்க கிரீடம்
ADDED :824 days ago
பாலக்காடு: குருவாயூர் கிருஷ்ணருக்கு காணிக்கையாக தங்க கிரீடம் தயாரித்துள்ளனர்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இக்கோவில் மூலவருக்கு காணிக்கையாக சமர்ப்பணம் செய்ய 38 சவரன் எடை கொண்ட தங்க கிரீடம் கோவையில் தங்க நகை தயாரிப்பு பணி செய்பவரும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவருமான ராஜேஷ் ஆச்சாரியா என்பவர் தயாரித்துள்ளனர். இந்த தங்க கிரீடம் ஸ்ரீகிருஷ்ணர் ஜெயந்தி நாளான செப். 6ம் தேதி மூலவருக்கு காணிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர். சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இது போன்ற தங்க கிரீடம் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.