உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் பாலாலயம்

திட்டக்குடி சுகாசன பெருமாள் கோவிலில் பாலாலயம்

திட்டக்குடி: திட்டக்குடி வேதாந்தவல்லி சமேத சுகாசன பெருமாள் கோவிலில் பாலாலயம் நடந்தது.

கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் வேதாந்தவல்லி சமேத சுகாசனபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில், கடந்த 2004ம் ஆண்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. 19ஆண்டுகளுக்குப்பின் தற்போது மஹா கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து சுகாசன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, சீரமைப்புப்பணிகளை துவக்குவதற்கான பாலாலய பூஜை நடந்தது. செப்.3ம் தேதி மாலை விக்னேஸ்வர பூஜை, வாஸ்து பூஜைகளுடன் பாலாலய பூஜை துவங்கியது. செப்.4ம் தேதி காலை சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி நடந்தது. அதன்பின் சுவாமிக்கு கண்திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பாலாலயம் நடந்தது. ஸ்ரீதர் பட்டாச்சாரியார், வரதசிங்காச்சாரியார் உள்ளிட்ட வேத விற்பன்னர்கள் பூஜைகளை செய்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !