தஞ்சாவூர் பெரிய கோவிலில் பிரதோஷ பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :811 days ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர்,பெரிய கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பிரதோஷ வேளையின் போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதன் அடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பிரதோஷத்தை முன்னிட்டு, நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.