மழை வேண்டி தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு வருண ஜெபம் வேள்வி
ADDED :810 days ago
அலங்காநல்லூர்: மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் அலங்காநல்லூர் தர்மசாஸ்தா கோயிலில் சிறப்பு வருண ஜெபம் வேள்வி நடந்தது. கோயில் முன் உள்ள புஷ்கரணியில் அர்ச்சகர்கள் தண்ணீரில் அமர்ந்தபடி மழை பொழிந்து முல்லைப் பெரியாறு, வைகை, சாத்தையாறு அணைகள் நிரம்பவும், விவசாயம் செழிக்க, அனைத்து உயிரினங்களும் பசியின்றி வாழ வேண்டி கூட்டு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து சுவாமிக்கு பிரதோஷ வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் பக்தி பணிக் குழுவினர் செய்திருந்தனர்.