உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இலங்கை, நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

இலங்கை, நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

இலங்கை: வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று காலை நடைபெற்றது.

இலங்கை, நல்லையம்பதி அலங்கார கந்தசுவாமி தேவஸ்தான நல்லூரான் கோயில் மஹோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று இலங்கை பக்தர்கள் புடைசூழ தேரோட்டம் நடைபெற்றது. விழாவில் முன்னதாக, கோயில் வசந்த மண்டவத்தில் விஷேச அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானை சமேதராக உள் பிரகாரம் வலம் வந்து தேரில் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. தேர்த்திருவிழாவில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அங்க பிரதட்சணம் செய்தும், காவடிகள் எடுத்தும், கற்பூர சட்டிகள் ஏந்தியும் முருக பெருமானை வழிபட்டனர். நாளை தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !