/
கோயில்கள் செய்திகள் / வேடர்புளியங்குளம் கல்யாண சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வேடர்புளியங்குளம் கல்யாண சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1121 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் வேடர்புளியங்குளம் வி.பி. சிந்தன் நகர் கல்யாண சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் மற்றும் லட்சுமி நரசிம்மர் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. நான்கு கால யாகசாலை பூஜை முடிந்து, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர்கள், பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனை நடந்தது. பின்பு மீனாட்சி, கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.