ரெகுநாதபுரம் ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை விழா
ADDED :762 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் இரண்டாம் பிரதிஷ்டை விழா நடந்தது. இன்று காலை 5:00 மணி முதல் தொடர்ந்து பகல் 12:00 மணி வரை பூஜைகள் நடந்தது. மூலவர் வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், நவகிரகங்கள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. உலக நன்மைக்கான கூட்டு வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்கார தீபாரதனைகள், பஜனை, நாமாவளி உள்ளிட்டவைகளில் பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் மற்றும் ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.