உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி வைபவம் துவக்கம்

காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி வைபவம் துவக்கம்

காரமடை : காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை வைபவம் இன்று முதல் தொடங்கியது.

கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் திருக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா மற்றும் நவராத்திரி உற்சவம் மற்றும் விஜயலட்சுமி விழா விமர்சியாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை இன்று தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு மூலவர் ரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் உற்சவமூர்த்தி டெல்லி சிம்மாசனத்தில் வென்பட்டு குடையுடன் மேள தாளங்கள் முழங்க திருக்கோவில் வளாகத்தில் வளம் வந்து கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு திருவாதனை வேத பாராயணம் உபநிஷத் அஷ்டோத்திரம் சேமிக்கப்பட்டு, மகா தீபாராதனை, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று இரவு 8 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாதர் ஆஸ்தானம் வந்து சேருவார். இந்நிகழ்ச்சியில் ஸ்தலத்தார்கள் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அதிகாரிகள் உபயதாரர்கள் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !