உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

திருப்பரங்குன்றத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன் நகர் கோயில்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள கற்பக விநாயகர் சன்னதியில் உற்சவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் கொடுக்கப்பட்ட களிமண் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது. கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர், பெரிய வைரத்தேரில் உள்ள விநாயகர் சிலைகளுக்கு கொழுக்கட்டை படைத்து தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் செப். 14முதல் நடந்த லட்சார்ச்சனை, யாகசாலை பூஜை நிவர்த்தி செய்ய பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்சவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மஹா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிக வாகனத்தில் சுவாமி விதி உலா நிகழ்ச்சியில் அருள்பாளித்தார்.பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், சங்காபிஷேகம், சிறப்பு பூஜை முடிந்து மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.திருப்பரங்குன்றம் படப்படி தெரு பட்டு பிள்ளையார் கோயிலில் மூலவருக்கு திரவிய அபிஷேகம்கள் முடிந்து சிறப்பு அலங்காரமானது. திருநகர் மகாலட்சுமி காலனி வர சித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை முடிந்த பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !