பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா; திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி
பிள்ளையார்பட்டி: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் சதுர்த்திப் பெருவிழா செப்.,10ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளி கேடகத்தில் உற்ஸவர் புறப்பாடும், இரவில் வாகனங்களில் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது. நேற்று செப்.,18 காலை சுவாமி தேருக்கு எழுந்தருளலும், மாலை தேர் வடம் பிடித்தலும் நடைபெற்றது. அன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தை பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (செப்.,19 ) காலை கோயில் திருக்குளத்தில் அங்குசத்தேவருக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம் 2:00 மணிக்கு மூலவருக்கு முக்கூருணி மோதகம் படையலிடப்படும். இரவில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.