உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குலசை., முத்தாரம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

குலசை., முத்தாரம்மன் கோயிலில் மழை வேண்டி சிறப்பு யாகம்

உடன்குடி: நல்ல மழை பெய்ய வேண்டி உடன்குடி விவசாயிகள் சார்பில் குலசை., முத்தாரம்மன் கோயிலில் வருணபகவான் யாகம் நடந்தது. துாத்துக்குடி தெற்கு மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலசங்க தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.
நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அலுவலர் ராமசுப்பிரமணியன், தமிழ்நாடு காமராஜர், சிவாஜி நற்பணி இயக்க பொதுச்செயலாளர் குட்டம் சிவாஜி முத்துக்குமார். தெற்கு மாவட்ட பம்புசெட் விவசாய சங்கசெயலாளர் ஆறுமுகபாண்டியன், வக்கீல் தனிஷ், பொது நலஆர்வலர் அசோக் சுப்பையா, ஓய்வு பெ­றற ஸ்பிக் மேலாளர் பாஸ்கர் வேலாயுதம், மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் குலசை., பெருமாள், சிறு நாடார் குடியிருப்பு பஞ்., தலைவர் கமலம் உட்பட ஏராளமான விவசாயிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !