உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அயோத்தி ராமர் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு

அயோத்தி ராமர் கோவிலுக்கு கூடுதல் பாதுகாப்பு

உத்தரபிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி 2020 ஆக., 5ல் அடிக்கல் நாட்டி துவக்கினார். 2.7 ஏக்கரில் 57,400 சதுர அடியில், மூன்று தளங்களாக அமைக்கப்படுகிறது. கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், அனுமன் சிலை, ராமாயண நுாலகம், மகரிஷி, வால்மிகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமைய உள்ளன. மூலவர் கோபுரத்தின் உயரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் 2024 ஜன., 14ல், ராமர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்ட பின் கோவில் முறைப்படி பக்தர்களுக்காக திறக்கப்படும் அறிவிக்கப்பட்டு்ள்ளதையடுத்து, கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பர். இதனால், அங்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோவில் பாதுகாப்புக்கு, ஏற்கனவே இருக்கும் சி.ஆர்.பி.எப்., படையினர் தவிர கூடுதலாக, உ.பி., மாநில போலீசின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 270 பேர், இன்று செப்., 20 முதல் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !