உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவம்; சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி உலா

திருப்பதி பிரம்மோற்சவம்; சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் மலையப்ப சுவாமி உலா

திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.

ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. மூன்றாம் நாளான இன்று சின்ன சிம்ம வாகனத்தில் யோகநரசிம்மர் அவதாரத்தில் மலையப்பசுவாமி மாடவீதியில் வலம் வந்தார். பின், மாலையில், முத்துபந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் வலம் வருகிறார். வாகனச் சேவையின்போது மங்கல வாத்தியங்கள், வேத கோஷம், நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !