அக்னி தீர்த்தத்தில் அங்குசதாரி; ராமேஸ்வரத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :746 days ago
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று அக்னி தீர்த்த கடலில் கரைத்தனர்.
செப்.,18ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று அனைத்து விநாயகர் சிலைகளும் வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டன. ராமேஸ்வரம் தேவர் சிலையில் இருந்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. ரயில்வே பீடர் ரோடு, ராமர் தீர்த்தம் தெரு, திட்டக்குடி, கோயில் வடக்கு ரத வீதி வழியாக நேற்று மாலை 6:00 மணிக்கு அக்னி தீர்த்த கடற்கரைக்கு சிலைகளை கொண்டு வந்து கடலில் கரைத்தனர்.