/
கோயில்கள் செய்திகள் / சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை; செப்.21ல் திறப்பு
சனாதன தர்மத்தை வேரூன்றச் செய்த ஆதிசங்கரருக்கு 108 அடி உயர சிலை; செப்.21ல் திறப்பு
ADDED :746 days ago
காந்த்வா ; மக்களுக்காகவும், உலக நன்மைக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஆதிசங்கரர். 32 ஆண்டுகள் மட்டுமே பூமியில் வாழ்ந்த ஆதிசங்கரர் தர்மத்தையும், வேதத்தின் தத்துவத்தையும் போதித்துள்ளார். சனதான தர்மத்தின் தத்துவங்களை விளக்கியுள்ளார். பாரத நாட்டில் சனாதன தர்மத்தை ஆழ வேரூன்றச் செய்தவர் ஆதிசங்கரர். இவருக்கு மத்திய பிரதேசத்தின் காந்த்வா மாவட்டத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலத்தில் ஒன்றான ஓம்காரேஷ்வர் கோவிலில் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 108 அடி உயர சிலையை நிர்மாணிக்கும் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வந்தது. இப்பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு வரும் செப்.21ல் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.