கேட்கும் வரம் தரும் கல்ப விருட்ச வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி
ADDED :817 days ago
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 4ம் நாளான இன்று மலையப்பசுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி - திருமலையில், பிரம்மோற்சவம் சிறப்பாக நடந்து வருகிறது. 4ம் நாளான இன்று பக்தர்களுக்கு கேட்கும் வரங்களை தரக்கூடிய வகையில், மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பிரம்மோற்சவ நான்காம் நாளில் கல்ப விருட்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார். விழாவில், யானை, குதிரை, காளைகள் அணிவகுக்க, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் விஷ்ணுவின் பல்வேறு வேடமணிந்தும், கோலாட்டம், தப்பாட்டம் ஆடியும் வந்தார்கள். விழாவில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.