திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சஷ்டி பூஜை
ADDED :1082 days ago
நத்தம், நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி சஷ்டி பூஜை நடந்தது. இதில் முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைபோலவே வேம்பார்பட்டி பாலமுருகன் கோவில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியிலும் சஷ்டியையொட்டி பூஜைகள் நடந்தது.