சங்கரன்கோவில் சங்கர நாராயணரை நேரடியாக பூஜித்த சூரிய பகவான்; பக்தர்கள் பரவசம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோயிலில் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது. சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மார்ச் 21,22,23 மற்றும் செப்டம்பர் 21,22,23 ஆகிய நாட்களில் கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை சூரிய பகவான் சிவலிங்கத்தை நேரடியாக பூஜிப்பதாக நம்பப்படுகிறது. இந்த அரிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று செப்டம்பர் 20ம் தேதி முன்னிட்டு கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்ச்சி நடந்தது. அப்போது கோயிலில் உள்ள மின் விளக்குகள் அனைத்தும் அணைக் கப்பட்டு சங்கரலிங்க சுவாமிக்கும், சூரிய பகவானுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த அரிய நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் பார்த்து தரிசனம் செய்தனர்.