உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலியில் குளம் வெட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு

திருநெல்வேலியில் குளம் வெட்டி விநாயகர் சிலைகள் கரைப்பு

திருநெல்வேலி; திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் குளம் வெட்டி அதில் விநாயகர் சிலைகளை கரைக்கும் வேலையில் தீயணைக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை, தாமிரபரணி ஆற்றில் குறைவாக தண்ணீர் செல்வதால் கரைப்பதில் சிக்கல் உள்ளது. வண்ணார்பேட்டையில் தாமிரபரணி ஆற்றின் அருகில் தனியாக ஒரு குளம் வெட்டி அதில் தீயணைப்பு துறையினர் மூலம் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை கரைக்கும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !