ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செப்பு தேரோட்டம்; பக்தர்கள் பரவசம்
ADDED :738 days ago
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் புரட்டாசி பிரம்மோற்சவம் ஒன்பதாம் திருநாளில் பெரிய திருவோணத்தை முன்னிட்டு செப்புத் தேரோட்டம் நடந்தது. நேற்று காலை கோயிலில் இருந்து பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி செப்பு தேருக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 7:00 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர். யானை முன் செல்ல சுமார் 40 நிமிடங்களில் ரதவீதி சுற்றி வந்து தேர் நிலையம் அடைந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமராஜா தலைமையில் அறங்காவலர்கள், கோயில் பட்டர்கள், அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.