உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மும்பையில் 200 கிலோ மீன் உணவில் தயாரான விநாயகர் சிலை; கரைக்கப்பட்டதும் மீனுக்கு உணவாகும்!

மும்பையில் 200 கிலோ மீன் உணவில் தயாரான விநாயகர் சிலை; கரைக்கப்பட்டதும் மீனுக்கு உணவாகும்!

மும்பை: மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக விதவிதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இதில் 200 கிலோ மீன் உணவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சிலை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. ஓம் ஸ்ரீசித்திவிநாயக் மித்ர மண்டல் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இந்த சிலை, மீனுக்கு வழங்கப்படும் உணவை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாக இந்த சிலை வரும் 28ம் தேதி பவாய் ஏரியில் கரைக்கப்படுகிறது. ஏரியில் சிலை கரைக்கப்பட்ட பிறகு இச்சிலை மீன்களுக்கு உணவாக மாறும் என்பது குறிபிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !