உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை

உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை

ராமேஸ்வரம்: உலக நன்மைக்காக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.

கன்னியாகுமரி விவேகானந்தர் கேந்திரம் சார்பில் தமிழக முழுவதும் பல புனித தலங்களில் திருவிளக்கு பூஜைகள் நடத்துகிறது. இதன் மூலம் பெண்கள் ஒன்றிணைந்து செயல்படுதல், ஆன்மிக சிந்தனைகள், வழிபாடுகள் மேம்படுத்துதலே நோக்கம் ஆகும். அதன்படி நேற்று மாலை ராமேஸ்வரம் கோயில் 3ம் பிரகாரத்தில் உலக நன்மைக்காக விவேகானந்தர் கேந்திரம் சார்பில் வேத மந்திரம் முழங்க திருவிளக்கு பூஜை நடந்தது. இப்பூஜையில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதில் விவேகானந்தா கேந்திரம் நிர்வாகிகள் ஐயப்பன், சரஸ்வதி, பா.ஜ., மாவட்ட பார்வையாளர் முரளீதரன், பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !