பரவையில் புரட்டாசி பால்குட திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :839 days ago
வாடிப்பட்டி: பரவை முத்துநாயகி அம்மன் கோயில் புரட்டாசி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். இக்கோயில் விழா செப்.,26ல் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். நேற்று மாலை பக்தர்கள் அக்னிசட்டி எடுத்து வழிபட்டனர். இன்று காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை கருப்பணசாமி கோயிலில் பொங்கல், முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. அக்.,6ல் பெருமாள் கோயிலில் பொங்கல் வைத்தல், 7ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை மண்டகப்படிதாரர்கள், கிராமமக்கள் செய்து வருகின்றனர்.