உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காந்தாரி அம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா; சர்வ மலர் அலங்காரத்தில் அம்மன்

காந்தாரி அம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா; சர்வ மலர் அலங்காரத்தில் அம்மன்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே தினைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட நாடார் குடியிருப்பில் உள்ள காந்தாரி அம்மன் கோயிலில் முளைக்கட்டு உற்ஸவ விழா நடந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நாள்தோறும் இரவு பெண்களின் கும்மியாட்டமும், ஆண்களின் ஒயிலாட்டமும் நடந்தது. நேற்று இரவு சக்தி கரகம் முன்னே செல்ல காவடி, அக்னிசட்டி உள்ளிட்ட நேர்த்திக்கடன் பக்தர்கள் ஊர்வலம் வந்தனர். மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சர்வ மலர் அலங்காரத்தில் காணப்பட்டார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சண்முகவேல் பட்டினம் கடற்கரையில் அம்மன் கரகம் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை நாடார் குடியிருப்பு கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !