கேது தலமான கீழப்பெரும்பள்ளம் கோயிலில் சிறப்பு அபிஷேகம்; பரிகாரம் செய்ய குவிந்த பக்தர்கள்
மயிலாடுதுறை: சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது பகவானாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோயிலில் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. பல வர்ணங்களை உடையவராக கருதப்படும் கேது பகவான் நவகிரகங்களின் ஞானத்தை அளிப்பவராக இவர் மன கோளாறு ,தோல் வியாதிகள், புத்திர தோஷம்,சர்ப்ப தோஷங்களை அளிக்க வல்லவர்.கேது பகவானுக்கு கொள்ளு தானியங்களை கீழே பரப்பி தீபமிட்டு வணங்கினால் கேது பகவானால் ஏற்படும் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். கேது பெயர்ச்சி வரும் அக்டோபர் 8 ம் தேதி 3.41 வினாடிகளுக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்நிலையில் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில் கேது பகவான் பரிகார ஸ்தலத்தில் கேது பகவானுக்கு மஞ்சள், சந்தனம் ,திரவிய பொடி, விபூதி ,பால் ,பன்னீர் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கேது பகவானை கேது பெயர்ச்சியை முன்னிட்டு வழிபாடு செய்து வருகின்றனர்.கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆகும். கேது பகவானுக்கு எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்தால் சிறப்பு ஆகும்.