/
கோயில்கள் செய்திகள் / அருணாசலேஸ்வரருக்கு உடைக்கப்பட்ட அதிசய தேங்காய்; சிவன் மூன்றாவது கண் என பக்தர்கள் பரவசம்
அருணாசலேஸ்வரருக்கு உடைக்கப்பட்ட அதிசய தேங்காய்; சிவன் மூன்றாவது கண் என பக்தர்கள் பரவசம்
ADDED :760 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர் ஒருவர் சுவாமிக்கு உடைத்த தேங்காயில் மூன்று அறைகள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
லிங்கமே மலையாக அமைந்த மலை *தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக திகழும் சிவ தலம் *பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. *நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலை என சிறப்பு பெற்ற தலம். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233 வது தேவாரத்தலம் ஆகும். இத்தலத்தில் நேற்று வழிபாட்டிற்கு வந்த ஒரு பக்தர்கள் உடைத்த தேங்காயில் மூன்று அறைகள் இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை பார்த்த பக்தர்கள் சிவனின் மூன்றாவது கண் என கருதி பரவசத்துடன் வழிபட்டு சென்றனர்.