உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி அமுதீஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம்

பழநி அமுதீஸ்வரர் கோயிலில் நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம்

பாலசமுத்திரம்: பழநி, பாலசமுத்திரம், பாலாறு அணை அருகே, அமுதீஸ்வரர் கோயிலில் சிவகாமி அம்மை நடராஜர் சன்னதிக்கு கும்பாபிஷேகம் நடை பெற்றது. பழநி, பாலசமுத்திரம், பாலாறு-பொருந்தாறு அணைக்கு அருகே பழம்பெருமை வாய்ந்த அமுதீசுவரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சிவகாமி அம்மன், நடராஜர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள், வேத விற்பன்னர்களால் வேள்விகள் செய்யப்பட்டது. (அக்.6) நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !