உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை

நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் ராகு, கேது பெயர்ச்சி பூஜை

நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் ராகு, கேது பெயர்ச்சியையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

நேற்று மதியம் 3.40 மணிக்கு ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீனம் ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பிரவேசித்தார். இதையொட்டி நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் சமேத செண்பகவல்லி அம்மன் கோவிலில் உள்ள ராகு, கோது பகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிரேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நட்சத்திர பரிகார அபிஷேகம் மற்றும் ஹோமங்கள், மகா பூர்ணாஹூதி, ராகு, கேது பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டாரத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !