உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசி ஏகாதசி; இழந்தவை யாவும் கிடைக்க கோவிந்தனை வழிபடுங்க

புரட்டாசி ஏகாதசி; இழந்தவை யாவும் கிடைக்க கோவிந்தனை வழிபடுங்க

திருமாலுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி. 15 நாளுக்கு ஒரு முறை வரும் இந்த திதியை புண்ணிய காலம் என்பர். இன்றைய ஏகாதசி, அஜா, அன்னதா ஏகாதசி  எனப்படுகிறது. 


இந்த விரதம் இருந்து தான் அரிச்சந்திரன் இழந்த நாட்டை பெற்றான். இந்த அற்புதமான புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி அஜா" ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசியில் விரதம் இருப்பின், வறுமை நீங்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். இந்த நாளில் விரதமிருந்தால் இழந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்கும். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்கவல்லது. குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ இன்று சக்கரபாணியை வழிபடுங்க.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !