திருச்செந்தூர் கோயிலில் ராஜகோபுர முகப்பு மண்டப திருப்பணிகள்
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ராஜகோபுரத்தின் கீழ் உள்ள முகப்பு மண்டபம், திருப்பணி மண்டபத்தில் பழமையும் தொன்மையும் மாறாமல் புனரமைக்கும் பணி துவங்கியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சார்பில் 200 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகப் பணிகளும் கும்பாபிஷேக திருப்பணிகளும் நடக்கிறது. கோயில் ராஜகோபுரத்தில் கீழ் பகுதியில் உள்ள திருப்பணி மண்டபம் | முகப்பு மண்டபம் திருக்கல்யாண மண்டபம் ஆகியவற்றின் பழமையும் தொன்மையும் மாறாமல் புனரமைப்பு பணிகள் தற்போது 16.60 கோடி ரூபாய் செலவில் நடக்கிறது. ராஜகோபுரத்தில் சிதிலமடைந்த சிலைகள் சீரமைக்கப்படுகின்றன. திருப்பணி மண்டபம் மற்றும் முகப்பு மண்டபத்தில் சிறையில் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த கடப்பாக்கல் மற்றும் கோட்டா கற்கள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. திருப்பணிகளை அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் கார்த்திக் ஆகியோர் கண்காணிப்பில் பணிகள் நடக்கிறது. ராஜகோபுரம் எதிரே முகப்பு மண்டபம் திருப்பணி மண்டபங்களில் கருங்கற்களுக்கு பதிலாக டைல்ஸ் பதிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் புகார்கள் வந்தன. ஆனால் கோவில் நிர்வாகம் அதனை மறுத்துள்ளது.