திருமாலின் திருவடியை பிடியுங்கள்!
பிறவியாகிய கடலில் இருந்து நீந்தி முக்தி என்னும் கரையை அடைவதற்கு திருமாலின் திருவடி என்னும் படகினை பற்றினால் போதும். எளிதாக பிறவியை கடக்கலாம் என்கிறார் நம்மாழ்வார்.
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணிசாரேன்
மடித்தேன் மனைவாழ்க்கையுள் நிற்பதோர் மாயையைக்
கொடிக்கோபுர மாடங்கள் சூழ்திருப்பேரான்
அடிசேர்வது எனக்கு எளிதாயின வாறே.
பெருமாளின் திருவடியை பற்றா விட்டாலும் அவரது அடியார்களான ஆழ்வார்களின் திருவடியை பற்றிக் கொள்வது எளிது. ஆம், அவர்கள் சிரமம் இல்லாமல் பெருமாளின் சன்னதியில் கொண்டு போய் நம்மை சேர்த்து விடுவார்கள்.
பன்னிரு ஆழ்வார்களின் திருவடியை பற்றிக் கொள்வோமா...
வேதம் தொகுத்துத் தமிழ்ப்பாடல் செய்ய விமலன் பொய்கை
பூதன் மயிலையர் கோன்புகழ்ச் சேரன்புத் துாரன் தொண்டர்
பாதம் தருந்துகள் மாமழிசைக்குமண் பாணன் மங்கை
நாதன் மதுர கவிகோதை பாதங்கள் நண்ணுதுமே.