உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மராமத்து பணிகளுக்கான பூமி பூஜை

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மராமத்து பணிகளுக்கான பூமி பூஜை

அவிநாசி: அவிநாசி ஸ்ரீ லிங்கேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருக்கோயில் நிதியில் மராமத்து பணிகளை செய்வதற்காக பூமி பூஜை நடைபெற்றது.அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில், 2024ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. அதற்காக கோவில் நிதியில் இருந்து கடைகள், காலனி பாதுகாப்பகம், பக்தர்களின் பொருட்கள் வைப்பறை கட்டுதல், பணியாளர் குடியிருப்பு மராமத்து பணிகள் செய்தல், தர்ப்பணம் மண்டபம் மராமத்து பணிகள் உள்ளிடவைகளை செய்வதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. மேலும் உள் பிரகாரத்தில் தரைத்தளம் சீரமைத்து கல் பதிக்கும் பணியினை உபயதாரர் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் பெரிய மருது பாண்டி, அறங்காவலர் பொன்னுச்சாமி, ரவி பிரகாஷ், உபயதாரர் சீதாலக்ஷ்மி,ஸ்தபதி குமாரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !