முத்தையா, பட்டாளம்மன் கோயில் திருவிழா கோலாகலம்
ADDED :744 days ago
தேவதானப்பட்டி: மேல்மங்கலத்தில் பட்டாளம்மன் முத்தையா கோயிலில் புரட்டாசி திருவிழா கோலாகலமாக நடந்தது ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் அருகே மேல்மங்கலம் வராக நிதி கரையில் அமைந்துள்ள பட்டாளம்மன்- முத்தையா கோயிலில் புரட்டாசி திருவிழா அக்.9 முதல் இன்று அக் 11 வரை 3 நாட்கள் மங்கள இசையுடன் கோலாகலமாக நடந்தது. முத்தையா, பட்டாளம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். கீழத்தெரு பேரவையின் மூன்று பட்டறை குதிரைகளை சாவடியில் இருந்து, மேளதாளம் முழங்க கோயிலுக்கு ஊர்வலமாக தூக்கிச் செல்லும் வைபவம், பொங்கல் வைத்தல், மா விளக்கு, அக்னி சட்டி, பால்காவடி, முளைப்பாரி எடுத்து வழிபாடு உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அக். 17ல் மறுபூஜை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை நடைமுறை நிர்வாகிகள் அறங்காவலர் குழு செய்திருந்தனர்.