கிருஷ்ணரின் கருணை கிடைக்க..!
ADDED :872 days ago
ஸ்ரீகிருஷ்ண பகவானின் கருணை கிடைக்க வேண்டுமா கீழ்க்கண்ட பாடலை பாடுங்கள்.
அருமறை முதல்வனை ஆழிமாயனைக்
கருமுகில் வண்ணனை கமலக்கண்ணனைத்
திருமகள் தலைவனை தேவதேவனை
இருபதம் முளரிகள் இறைஞ்சி ஏத்துவாம்.
எல்லை எதுவென்று அறிய முடியாத வேதங்களால் போற்றப்படும் முதல்வனே, கடலில் துயில்பவனே, மாயையில் வல்லவனே, மேக நிறத்தவனே, தாமரை போல சிவந்த கண்களைக் கொண்டவனே, மகாலட்சுமியின் மணாளனே, தேவர்களின் தலைவனே உன்னுடைய தாமரைப்பாதங்களை போற்றுகின்றோம்.