உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை

சீரடி சாய்பாபா கோவிலில் ஆரத்தி பூஜை

சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை, அன்னதானம், சப்பர பவனி நடந்தது.

இதையொட்டி நேற்று அதிகாலை ஆரத்தி பூஜையில் பக்தர்கள் தங்களது கைகளாலேயே சாய்பாபாவிற்கு பால் அபிஷேகம் செய்து செந்தாமரம் வீசி பூஜை செய்தனர்.மதியம் நெய் தீபம் ஏற்றி ஆரத்தி பூஜை நடந்தது. பின் சாய்பாபாவிற்கு காணிக்கை புத்தாடை அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. மாலை ஆரத்தி பூஜை நடத்தப்பட்டு சாய்பாபா கோயிலிலிருந்து பக்தர்கள் இழுத்து செல்ல சப்பர பவானி நடந்தது. தொடர்ந்து காலை11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அன்னதானம் நடந்தது. திண்டுக்கல், நத்தம், செந்துறை, கோபால்பட்டி, உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசித்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் ஞானகிரேசி, ஸ்டாலின் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !