சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு; பக்தர்கள் சுவாமி தரிசனம்
ADDED :920 days ago
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு சிறப்புடன் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதனை முன்னிட்டு நேற்று காலை 6:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலை ஏறியதாக வனத்துறையினர் தெரிவித்தனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சந்தன மூர்த்தி சுவாமிகளுக்கு பிரதோஷ வழிபாடு பூஜைகளை கோயில் பூசாரிகள் செய்தனர். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு மற்றும் சாப்டூர் போலீசார் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அக்.15 வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதித்துள்ளது.