உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தகிரி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

சித்தகிரி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்

குன்னூர் : குன்னூர் அருகே எடப்பள்ளி கிராமத்தில் உள்ள சித்தகிரி ஷீரடி சாய்பாபா கோவிலில் நவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு விழா இன்று சிறப்பாக துவங்கியது. சித்தகிரி சாய்பாபா கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலிருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் நவராத்திரி கொலு பொம்மைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்று துவங்கிய நவராத்திரி விழாவில் வாழும் கலை நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !