உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் கருட சேவை

வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் கருட சேவை

சென்னை; வடபழனி வடபழனி ஆதிமூலப்பெருமாள் கோயிலில் புரட்டாசி 4வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் மூலவருக்கு விசேஷ அலங்காரம் வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து உத்ஸவர் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாளை 15-10-2023 முதல் 23-10-2023 வரை  நவராத்திரி உத்ஸவம் நடக்கிறது. விழாவில் காலை 7 மணிக்கு தாயார் திருமஞ்சனம், மாலை 5.15 மணிக்கு தாயார் உள் புறப்பாடு, சிறிய திருமடல் சேவை, ஊஞ்சல், தீபாராதனை, சாற்றுமறை, தீர்த்த பிரசாத  விநியோகம் நடைபெறுகிறது. மாலை 6.45 மணி முதல் 8.15 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !