உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி வெங்கடேச பெருமாளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவாட்சி

செஞ்சி வெங்கடேச பெருமாளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவாட்சி

செஞ்சி: செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு 1 லட்சம் ரூபாய் மதிப்பில் திருவாட்சி சாத்தியுள்ளனர்.

செஞ்சி பீரங்கிமேடு அருணாச்சல ஈஸ்வரர் கோவிலில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி நான்காவதாக சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் காணிக்கையாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க முலாம் பூசப்பட்ட திருவாச்சியை நேற்று சாத்தினர். இதை முன்னிட்டு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !